The Indian Times

மகளுக்கு மேக்கப் போடும் அப்பா..அப்பாவை கொஞ்சி விளையாடும் குட்டி மகள் | Nakul Akira Cute Video

பெற்றோராக இருப்பது ஒரு கலைதான். பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மிக அழகாக இருக்கும். பிள்ளைகளுக்கு பல் முளைப்பது, அவர்கள் மழலைச் சொல் பேசுவது என்று பிள்ளைகள் நம்முடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. நாமெல்லாம் நாமெல்லாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது கேமிரா, வீடியோ எதும் இல்லாத காரணத்தினால் நம்ம செய்த சேட்டைகளை பார்க்க முடியாமல் போனது .. ஆனால் இப்போது இருக்கும் மார்டன் பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புத் தனத்தையும் வீடியோவாக எடுத்து பொக்கிஷமாக வைத்துக் கொள்வது சகஜமான ஒன்றாகிவிட்டது.

அந்த வகையில் நம்ம நகுல்-ஸ்ருதி தம்பதியினரின் மகளான அகிரா செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து அவர்கள் சமூக வலைத்தளங்கில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் இருவரும் உள்ளனர். இன்றைக்கு அகிரா டிவி பார்த்து நடனமாடும் வீடியோ ஒன்றை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

Advertisement

அந்த வீடியோவில் சில நாட்களுக்கு முன்பு தந்தை நகுல் ஆடும் நாக்க-மூக்கா பாடலுக்கு துள்ளிக் குதிக்கும் அகிராவின் வீடியோவை பகிர்ந்து இருந்தனர். தற்போது அப்பா கொஞ்சம் மேல பாரு என்று அகிரா கூறுவது போன்று cute ஆன வீடியோவை பகிர்ந்துள்ளார். நீங்களும் அந்த வீடியோவைக் காண …Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in