The Indian Times

சிங்கம் சூர்யா போல் பெரிய மீசையோடு, பார்க்கவே கம்பீரமாக இருக்கும் அருண் விஜயின் New Look!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வளம் வருபவர் அருண் விஜய். சினிமாவில் நடிக்க எளிதாக வாய்ப்பு கிடைத்தாலும் ஆரம்பகாலத்தில் அவரால் ஒரு வெற்றிப்படத்தை தர முடியவில்லை. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்தும் அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக்கொண்டிருந்த அருண் விஜய்க்கு நீண்ட நாட்கள் கழித்து என்னை அறிந்தால் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய். கிடைத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அருண் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. அதன் பிறகு இவர் நடித்த குற்றம் 23, செக்க செவந்த வானம் , தடம் , மாஃபியா தொடர் வெற்றிகளை தேடித்தந்தது.

Advertisement

ஆரம்பகாலத்தில் தோல்வி படத்தை கொடுத்தாலும் இன்று சினிமாவில் கம்பேக் குடுத்து வெற்றியை நிலைநாட்டியுள்ளார் அருண் விஜய். சமீபத்தில் கூட அருண் விஜய் நடிக்கும் பார்டர் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்ப்போது அருண் விஜயின் நியூ லுக் என தற்போது அவர் வைத்திருக்கும் லுக்கின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in