The Indian Times

நடிகர் விமல் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் ஹீரோ சேன்சிற்காக ஏங்கி தவிக்கும் பலருக்கு மத்தியில் அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரிய நடிகர்களுடன் நடித்த பிறகும் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொல்லாமல் கோட்டை விட்ட நடிகர்கள் பலர். அந்த வரிசையில் ஒரு சிறந்த வெற்றி படத்தை கொடுக்க போராடி கொண்டிருக்கும் நடிகர் விமல்.

ஆரம்பகாலங்களில் கில்லி, குருவி , பந்தயம் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விமல் ஹீரோவாக மாறுவதற்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படம் பசங்க. அதன் பிறகு களவாணி , வாகை சூடவா , கலகலப்பு போன்ற சில வெற்றி வெற்றி படங்களை கொடுத்தாலும் தற்போது அவரால் அனைவரையும் கவர்ந்த கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.

Advertisement

சமீப காலத்தில் வெளியான களவாணி 2 , மன்னர் வகையறா , மாப்பிளை சிங்கம் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. தற்போது மீண்டும் ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் விமல் , முந்தையகாலத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே சீரியலிலும் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. ராதிகா நடிப்பில் மிகவும் பிரபலமான சித்தி சீரியலில் நடித்துள்ளார் விமல்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in