The Indian Times

சமந்தாவா இது? என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தா!

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு favourite ஹீரோயின் ஆக இருப்பவர் நடிகை சமந்தா. அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துக்கொள்கிறார்கள் என அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திருமணமான பின்னர், தற்போது கவர்ச்சிகரமான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் சமந்தா.

Advertisement

இந்நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான சமந்தாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திரைப்படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா. தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்து வரும் சமந்தாவின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in