The Indian Times

போட்டோ வெளியிட்டு மாப்பிளை தேடும் பிக் பாஸ் பிரபலம்!

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி யங்ஸ்டர்ஸின் மனதை துள்ளி குதிக்க வைத்த நடிகை ஷெரின். இவர் துள்ளுவதோ இளமை படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி விசில் , கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் இறுதியாக தமிழில் நடித்து வெளியான படம் நண்பேன்டா. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார் ஷெரின். பிறகு விஜய் டிவி யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகளவில் ரசிகர்களை சேர்த்துக் கொண்டார் ஷெரின். படங்களில் நடித்து கொண்டிருந்தபோது கூட இந்த அளவிற்கு அவருக்கு பாலோவெர்ஸ் இருந்தது கிடையாது.

Advertisement

இடையில் சில தோல்வி படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் பிக் பாஸிற்கு வந்த பிறகு இவரது ரேஞ்ஜே மாறிவிட்டது. படங்களில் நடித்தபோது ஸ்லிம் ஆகா காணப்பட்ட ஷெரின் பட வாய்ப்புகள் குறைந்ததும் சற்று உடல் எடையை கூடி இருந்தார் ஷெரின். தற்போது மீண்டும் பிக் பாஸிற்கு பிறகு உடல் எடையை குறைத்துள்ளார். அதுமட்டுமில்லாது துணைக்கு தானே மாப்பிள்ளையும் தேடி வருகிறார் ஷெரின். இன்ஸ்டாகிராமில் புடவை கட்டி மங்களகரமாக போட்டோ வெளியிட்டு பொண்ணு ரேடி மாப்பிளை எங்க என்று கேட்டு பதிவு செய்துள்ளார். இதற்கு அவரது பாலோவ்ர்ஸ் மாப்பிளை யாரு என்று கமெண்ட் செய்து இந்த போட்டோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in