The Indian Times

படிக்காம என்னடி போனை நோண்டிகிட்டு இருக்கே.. யாருக்கு மெசேஜ் அனுப்புறே… இனியாவை கண்டித்த ராதிகா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இனியா அம்மா மீது கொண்டுள்ள கோபத்தால் அப்பா வீட்டில் வந்து தங்குகிறார்.அங்கு படிக்காமல் செல்போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்புகிறார் அதனை ராதிகா பார்த்து அவரை கண்டிக்கிறார்,உடனே இனியா நீங்க யாரு என்னை கேள்வி கேட்க என கூறவே,உங்க அம்மா இடத்தில இப்போ நான் தான் கேட்கணும் என கூறி ஒழுங்காக படிக்க சொல்லி கண்டித்துள்ளார். ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ராதிகாவை பாராட்டி வருகின்றனர்.சூப்பர் ராதிகா அசத்திடீங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=uULcZu77vsc

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in