The Indian Times

பாக்கியாவிடம் ஆங்கிலம் பேசி அசிங்கப்படுத்திய ராதிகா… பாக்கியாவுக்கு ஆங்கிலம் தெரியல என கூறி கம்பெனியில் கேவலப்படுத்திய ராதிகா.. பாக்யலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.புதியதாக கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்து அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார்.இந்த தொழில் மீது உள்ள நம்பிக்கையால் வீட்டை தான் வாங்குவதாக கூறி 2 லட்சம் பணத்தையும் கோபியிடம் கொடுத்து அவரது மூக்கை உடைக்கிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய்தொலைக்காட்சி

ப்ரோமோவில் பாக்கியாவுக்கு கேட்டரிங் காண்டிராக்ட் கொடுக்க ராதிகா நிறுவனம் ஒப்புக்கொள்ள இதனால் காண்டாகிய ராதிகா பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசி இவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனவே காண்டிராக்ட் கொடுக்க வேண்டாம் என என அசிங்கப்படுத்துகிறார் ராதிகா..உடனே பாக்கியா, எல்லாரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை நானும் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன் விரைவில் என கூறி பதிலடி கொடுத்து சவால் விட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAYTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in