The Indian Times

கேட்டரிங் பத்தி சொல்லுங்க… உங்க கதையை என் கம்பெனி கேட்கவில்லை.. அனைவரின் முன்பு பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராதிகா நிறுவனத்தில் உணவு காண்டிராக்ட் எடுக்க செல்லும் பாக்கியாவை ராதிகா அனைவரின் முன்பும் அசிங்கப்படுத்தியுள்ளார்.பாக்கியாவை அசிங்கப்படுத்துவதை பார்த்து அனைவரும் சிரித்துள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் ராதிகா மேல் அதிக கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.கமெண்டில் ராதிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்

https://www.youtube.com/watch?v=DWRQiYHvt0M

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in