டேய் அமீர் வேணாண்டா ப்ளீஸ்… பனியில் காதலன் அமீர் உடன் விளையாடி மகிழ்ந்த பாவனி

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

டேய் அமீர் வேணாண்டா ப்ளீஸ்... பனியில் காதலன் அமீர் உடன் விளையாடி மகிழ்ந்த பாவனி 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,இறுதியாக அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

டேய் அமீர் வேணாண்டா ப்ளீஸ்... பனியில் காதலன் அமீர் உடன் விளையாடி மகிழ்ந்த பாவனி 2

விளம்பரம்

தற்போது இருவரும் ஜோடியாக விடுமுறைக்கு மணாலி சென்றுள்ளனர்.அங்கு பனியில் இருவரும் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர் ஷேர் செய்துள்ளார்.இந்த வீடியோ இவர்களின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் இருவரின் திருமணமும் எப்பொழுது மற்றும் இருவரும் இப்படி மகிழ்ச்சியாகவே இருங்க என கூறி தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment