The Indian Times

தெரு நாய்களிடம் அன்பு காட்டி உணவு வழங்கும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.

இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்,இதனால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

என்னதான் நாடகத்தில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் மிகுந்த நல்லவராக உள்ளார்,இவர் தினமும் காலையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரசிகர்கள் கோபியின் செயலை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in