The Indian Times

அபியுடன் தனித்தீவில் மாட்டிக்கொண்ட வெற்றி… எப்படி தப்பிப்பார்கள்? தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது வெற்றிக்கும் அபிக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,அபியின் எதிரிகளால் சுடருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு சுடருக்கு பாதுகாவலர் ஆக வெற்றி வருகிறார்,மேலும் வெற்றியை சுடரின் பாதுகாவலராக நியமனம் செய்ய முடியாது என அபி கூறவே இறுதியை ஒப்புக்கொள்கிறார் அபி,மேலும் சில பிரச்சினையினால் வெற்றியை அபி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.இதனால் வெற்றி அபி மீது செம்ம கோவத்தில் உள்ளார்.அபியை எதிரிகள் சிலர் கடத்தி சென்று கல்லை கட்டி கடலில் போட்டு விடுகின்றனர்,அங்கு அபியை காப்பாற்ற கப்பலில் வரும் வெற்றி கடலில் குதித்து அபியை மீட்டெடுக்கிறார்.மேலும் இருவரும் நடுக்கடலில் கப்பலில் மாட்டி விடுகின்றனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கடலில் இருந்து தனி தீவுக்கு வந்து சிக்கி விடுகின்றனர் அபி மற்றும் வெற்றி,தனி தீவில் இருப்பதை அறிந்துகொண்ட அபி பயத்தில் மயங்கி விடுகின்றார்.இதில் இருந்து இருவரும் எப்படி தப்பிப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in