The Indian Times

நீ தெருவுல நடந்து போனா பாக்கியா புருஷன்னு தான் சொல்லுவாங்க… பாக்கியா தான் ELECTIONல ஜெயிப்பா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது காலனி செக்ரட்டரி தேர்தலில் பாக்கியா நிற்பதாக அறிவித்துள்ளார்.பாக்கியா ஜெயிக்க மாட்டாள் என தாத்தாவிடம் கோபி சவால் விடுகிறார்,அதற்கு தாத்தா நீ தெருவுல நடந்து போனா பாக்கியா புருஷன்னு தான் சொல்லுவாங்க,பாக்கியாவுக்கு அவ்வளவு பேரை தெரியும்,அவ்வளவு இதயங்களை வச்சிருக்கா,அவ தான் கண்டிப்பா ஜெயிப்பா,நீ நின்னு ஜெயிச்சிடுவியா,கிழிப்பே நீ உன்னால ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என கூறி கிழித்தெடுத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=CIjOpleSrH0&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in