The Indian Times

40 ஆயிரத்தை கோபி முகத்தில் விட்டெறிந்த பாக்கியா… வேறெலெவெல் சம்பவம் இருக்கு போலயே…| Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் பாக்கியா கோபி செலவு செய்த 40 லட்சத்தினை திரும்ப தருவதாக கூறவே,அதற்காக சமையல் காண்டிராக்ட் எடுத்து அசத்தி வருகிறார்

தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் ஒரு திருமண மண்டபத்தில் சமையல் காண்டிராக்ட் கிடைக்கவே,அதில் வந்த 40 ஆயிரத்தினை கோபிக்கு அனுப்பியுள்ளார்,மேலும் போன் செய்து முதல் தவணை 40 ஆயிரத்தினை அனுப்பியுள்ளேன் என கெத்தாக கூறவே,கோபி அரண்டுபோய் நின்றுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in