The Indian Times

தல தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஸ்ரேயா சித்து…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

ஸ்ரேயாவும் சித்துவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.பட்டாசு வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி வீடியோ எடுத்துள்ளனர்,இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரேயா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in