The Indian Times

செல்வராகவனின் அரக்கத்தனமான நடிப்பில் வெளியாகிய பகாசூரன் TRAILER இதோ…

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை ஜி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர் ராதா ரவி,ராஜன்,சரவணன் சுப்பையா,குணநிதி ,மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்திற்கு பிறகு முழுவதுமாக வில்லத்தனமான நடிப்பினை இப்படத்தில் காட்டியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இயக்குனர் மோகன் கதையில் எப்பொழுது தனித்துவம் இருக்கும் என்பதால் அது இப்படத்திலும் உள்ளதை ட்ரைலர் மூலம் காணமுடிகிறது.பெண்களை தவறாக பயன்படுத்துபவர்களை வதம் செய்யும் சூரனாக வருகிறார் இந்த பகாசுரன் .படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

Embed video credits : MRT music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in