The Indian Times

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியது ர த் த ம் படத்தின் TRAILER

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.தற்போது ரத்தம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ரத்தம்.இப்படத்தில் இவருடன் மஹிமா நம்பியார்,ரம்யா நம்பீசன்,நந்திதா சுவேதா ஆகியோர் நடித்துள்ளனர்.கண்ணன் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதுவரை நடித்த படங்களில் தற்போது இப்படத்தில் முற்றிலும் மாறுதலாக காணப்படுகிறார் விஜய் ஆண்டனி.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : Saregama tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in