The Indian Times

முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்… வெளியான புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர்.

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரணம் தொடரின் இறுதிப்பகுதி பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் நடக்கும் அதில் ஏற்படும் நிகழ்வுகள் தான் கிளைமாக்ஸ் காட்சிகள் என்பது தற்போது நாடகம் நகருவதை கொண்டு கணிக்க முடிகிறது

தற்போது வெண்பா மணப்பெண் கோலத்தில் கோவிலில் இருப்பது போல புகைப்படம் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இறுதி தொடருக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இந்த தொடர் தற்போது முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது செய்தியறிந்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in