The Indian Times

LEGEND அண்ணாச்சி போல் வந்து SKவை கலாய்த்த அமுதவாணன் | KPY CHAMIPONS GRAND FINALE PROMO

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,அர்ச்சனா மற்றும் ரோபோ சங்கர் உள்ளனர்.

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த இறுதி போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார்.மேலும் இந்த மேடை தான் என்னை இன்று இவ்வளவு பெரிய ஆளாக உயர்த்தி மக்களுக்கு நான் என்னை காண்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் நிகழ்ச்சியில் போட்டியாளராக வரும் அமுதவாணன் லெஜெண்ட் சரவணன் கெட்டப்பில் வந்து சிவகார்த்திகேயன் நான் யாருக்கும் போட்டி இல்லை என்று கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in