The Indian Times

பார்க்கும் இடைமெல்லாம் பாரதி முகம்.. நினைவுகளால் தவிக்கும் கண்ணம்மா…. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

தற்போது விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் விவகாரத்து வாங்கிய கண்ணம்மாவுக்கு அடிக்கடி பாரதி முகம் வந்து செல்கிறது.எதனை பார்த்தாலும் பாரதியை பார்ப்பது போல தோன்றுவதால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான காதல் ,அதான் கணவரின் முகம் உங்களுக்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது அவருடன் சேர்ந்து வாழுங்கள் என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=vQ5aPylUVOY

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in