The Indian Times

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வெளியேறும் கதாநாயகன்? இன்ஸ்டாகிராம் பதிவால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

இந்த தொடர் தற்போது வெற்றிகரமாக ஓடி 700வது எபிசோடை தொட்டு சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியை அண்மையில் பாக்கியலட்சுமி குழுவினர் கோலாகலமாக கொண்டாடினர்.இந்நிலையில் இந்த தொடரில் பாக்கியாவுக்கு இரண்டாவது மகனாக நடித்து வரும் எழில் இந்த தொடரை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் என்பவர் தற்போது எமோன் என்ற படத்தில் நடித்துள்ளார்,இந்த படத்தின் டீசரை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள் படங்கள் நடிக்க தொடங்கியதால் எழில் இனி நாடகத்திற்கு வரமாட்டார் என கூறி வருகின்றனர்.ஆனால் அவர் அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in