The Indian Times

நீங்க எங்க வீட்டு பிள்ளை பாரதி… தலையில் தூக்கி வைத்துகொண்டாடும் கிராம மக்கள்… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

தற்போது விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. கண்ணம்மாவை தன்னுடன் வாழ வரக்கேட்டு கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்துவிடுகிறார் பாரதி.பாரதியை கிராமத்து மக்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கின்றனர்.இருப்பினும் பாரதியின் தீவிர முயற்சியால் கிராமத்திற்கு மருத்துவமனை வர ஏற்பாடு செய்துவிட்டார்.இதனால் ஊர் மக்கள் பாரதியை பாராட்டி அரவணைத்து கொள்கின்றனர்,மேலும் நாட்டாமை, பாரதி நீ எங்க வீட்டு பிள்ளைப்பா என கூற மகிழ்ந்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=3HpBwh-w3ds

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in