The Indian Times

மான்..புலி..சிங்கம்ன்னு மிரட்டும் BIGG BOSS 6 TRAILER இதோ!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.உலகநாயகன் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் விரைவில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இதுவரை இல்லாத புதிய யுக்தியை பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்த முறை கடைபிடிக்க உள்ளது.இது வரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது பிக் பாஸ்.மேலும் கடந்த சீசன்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறாததால் இம்முறை புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பிக் பாஸ் 6வது சீஸனின் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.விஜய் டிவி.இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் வீடுன்னு ஒன்னு இருந்தா போட்டின்னு ஒன்னு இருக்கும்,அந்த போட்டி வேட்டையா மாறும்,சிலர் மான் போல துள்ளி குதிப்பாங்க ,சிலர் புலி மாதிரி பதுங்கி பாயுவாங்க,சிலர் பாம்பு மாதிரி சீற பார்ப்பாங்க என மிரட்டலாக பேசியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இன்னும் அதிகரித்துள்ளது.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in