The Indian Times

பிரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிரூப்..சந்தோஷத்தில் திணறியபிரியங்கா | BIGG BOSS JODIGAL PROMO

விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருகிறது.இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது இந்த
நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்களை வைத்து விஜய் டிவி BIGG BOSS ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் இணைந்து ஆடி டைட்டிலை தட்டி சென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீசனில் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,பாவனி மற்றும் அமீர் ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் அசத்தி வருகின்றனர்.ஜோடிகள் அனைவரும் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தங்களது சிறப்பான நடனத்தினை காண்பித்து இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

இந்த வாரம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா 10 வருடத்தினை நிறைவு செய்துள்ளார்.அதனை கொண்டாடும் விதமாக அவரது நண்பர் மாகாபா ,நிரூப் ஆகியோர் வந்து ப்ரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.மேலும் அவருக்கு பரிசுகள் வழங்கி கேக் வெட்டி இதனை கொண்டாடியுள்ளனர்.இதனால் பிரியங்கா நெகிழ்ந்து போனார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் பிரியங்கா ரசிகர்களும் அவருக்கு தொகுப்பாளினியாக 10 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in