The Indian Times

இது உலகமகா நடிப்புடா சாமி..இப்படி நடிக்கிறாரு கோபி..|BAAGYALAKSHMI SERIAL

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.

இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்கிறார்.உடனே கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.ஆனால் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறாமல் கோபி துணியை வெளியே தூக்கி எறிகிறார்.உடனே கோபி தனது வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவிடம் சென்று பாக்கியா தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக நடிக்கிறார்.என் பொண்ணு இனியா அழுதுகொண்டே இருக்கிறார்.ராதிகா நீ இந்த வீட்டில் இருப்பியா இல்லையா என்ற குழப்பத்திலேயே வந்தேன்.உன்னை இங்கு பார்த்த பிறகு தான் நிம்மதியாக உள்ளது.இத்தனை வருஷம் எந்த குடும்பத்திற்காக உழைத்தனோ அந்த குடும்பமே என்னைவீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டது.என கூறி நடித்துள்ளார்

https://youtu.be/KYQUfzTdvFc

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in