The Indian Times

குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட CWC சந்தோஷ்…அட பட்டையை கிளப்புறாரே

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சந்தோஷ் பிரதாப்.முன்னதாக பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று கொடுத்திருக்கிறது.சினிமாவில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்த சந்தோஷுக்கு வாய்ப்பு 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் மூலம் கிடைத்தது.அவர் இயக்கிய கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த படத்திலும் கிடைக்கவில்லை இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து போராடினார்.இறுதியாக சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு அங்கும் அசத்தினார்.வித விதமான சமையல்கலை செய்து மக்களையும் நடுவர்களையும் கவர்ந்தார்.திடீரென சந்தோஷ் எலிமினேட் ஆகியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

Advertisement

தற்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சந்தோஷ் அங்கு சிறுவர்களுடன் மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சந்தோஷின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in