The Indian Times

ஆர்யாவின் 34வது படத்தினை இயக்கும் இயக்குனர் முத்தையா… படபூஜையுடன் துவக்கம்

முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் இயக்குனர் முத்தையா.இவரின் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மண் மனம் மாறாத மண் வாசனையில் அடிதடியுடன் படங்களை எடுப்பதில் இவரை தமிழ் சினிமாவில் அடித்துக்கொள்ள ஆளே இல்லை.2013 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரை வைத்து குட்டிப்புலி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகியவர் தான் முத்தையா .இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்து முன்னணி இயக்குனராக அவதாரம் எடுத்தார் முத்தையா.அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தினை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.இப்படம் இவரை உயரத்திற்கு அழைத்து சென்றது.

இதனை தொடர்ந்து வரிசையாக மண் வாசனையில் படத்தினை எடுத்து வருகிறார் முத்தையா.அதன்படி தற்போது மீண்டும் நடிகர் கார்த்தியை வைத்து இவர் விருமன் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,இதனால் அடுத்தப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் ஆர்யாவின் 34வது படத்தினை இயக்க உள்ளார்.

Advertisement

இப்படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்தானி நடிக்க உள்ளார்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரும்ஸ்டிக் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இன்று இப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது,இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in