The Indian Times

BIGGBOSS மகேஸ்வரியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..BIGGBOSS REUNION

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி.அங்கிருந்து படிப்படியாக பிற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.

மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் இவருக்கு அதிகம்.

Advertisement

மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி பையன் இருக்கிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனை தனது உழைப்பில் படிக்க வைத்து வருகிறார்.

தற்போது மகேஸ்வரிக்கு பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

போட்டியாளர்களிடம் தற்போது சண்டையை ஆரம்பிப்பதே மகேஸ்வரியாகத்தான் இருந்தார்.மகேஸ்வரி நன்றாக விளையாடி வந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மகேஸ்வரி சென்ற பின்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைய தொடங்கியது.

தற்போது தனக்கான சினிமா வாய்ப்பிற்காக காத்துக்கொண்டுள்ளார் மகேஸ்வரி

இந்நிலையில் நேற்று மகேஸ்வரியின் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் ஏடிகே மற்றும் ஷிவின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in