The Indian Times

BILLA பட நயன்தாரா போல் MASS-ஆக ஓடும் கப்பலில் அமர்ந்திருக்கும் நயன்தாரா

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.இவ்வாறு பெரும் கட்டுப்பாடுகளுடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு தங்களது இரண்டாவது ஹனி மூனை கொண்டாட சென்றுள்ளனர்.அங்கு விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்து வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மனைவி நயன்தாரா ஓடும் கப்பலில் கூல் ஆக அமர்ந்திருக்கும் அழகை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.நயன்தாராவின் ஸ்டைலை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in