The Indian Times

அடடே செம்ம ..திருமண தேதியை அறிவித்த குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் புகழ்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த நகைச்சுவை பலராலும் பேசப்பட்டு தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு ஓரமாக நின்று விட்டு செல்லவேண்டும் என சினிமா வாய்ப்பு தேடியவர் இன்று கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.இதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு ஆகும்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை ,இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

ஆரம்பத்தில் விஜய் டிவியில் கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.தற்போது அவர் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் பலனாய் சினிமாவில் இன்று நல்ல நிலைமையில் உள்ளார்

Advertisement

இவர் தற்போது பென்சி என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.இவர்கள் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி புகழ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.எப்பொழுது இவர்கள் திருமணம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்சமயம் புகழ் தனது கல்யாண தேதியை உறுதி செய்துள்ளார்.புகழ் மற்றும் பென்ஸ் ரியா திருமணம் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த கல்யாண பத்திரிகை அழைப்பிதழ் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.பல ரசிகர்களும் புகழுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in