The Indian Times

நாகர்ஜூனாவை BB JODIGAL நிகழ்ச்சியில் பங்கமாக கலாய்த்த ரம்யா கிருஷ்ணன் | BB JODIGAL FINAL PROMO

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.வாரம் வாரம் போட்டியாளர்களுக்கு இடையே போட்டி கடுமையாகி கொண்டு வருகிறது.

Advertisement

தற்போது இறுதி போட்டி போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்றுள்ளது.இறுதி போட்டியின் புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த இறுதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குன ராஜமவுலி,நடிகர் நாகர்ஜுனா மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களில் நாகர்ஜூனாவிடம் தொகுப்பாளினி பிரியங்கா உங்களுக்கு இருந்த ஒரு CRUSH யாரு என்று கேட்க அதற்கு ரம்யாகிருஷ்ணன் யாரை பார்த்து என்ன கேட்டீங்க ,ஒன்று இல்லை நிறைய இருக்கும் கேளுங்கள் என கூறி கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in