கேப்டன் விஜயகாந்திற்கு தனது கையால் கடிதம் எழுதிய தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

கேப்டன் விஜயகாந்திற்கு தனது கையால் கடிதம் எழுதிய தளபதி விஜய் 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

கேப்டன் விஜயகாந்திற்கு தனது கையால் கடிதம் எழுதிய தளபதி விஜய் 2

விளம்பரம்

தளபதி விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.இதனால் தளபதி விஜயை சிறுவயதில் இருந்தே விஜயகாந்திற்கு தெரியும். தளபதி விஜயும் விஜயகாந்தை அண்ணா அண்ணா என்று பாசமாக அழைத்து வருவார்.விஜயகாந்தின் பிறந்தநாள் ஒன்றிற்கு,தளபதி விஜய் தனது கைகளால் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment