மீண்டும் அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை.. செம்ம டென்ஷன் ஆன தயாரிப்பாளர் | Blue Sattai Maaran

விளம்பரம்
விளம்பரம்

ரசிகர்களின் மூன்று வருட கனவை நனவாக்கியுள்ளது வலிமை திரைப்படம். மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த செய்தியை படத்தின் கதா நாயகி ஹீமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முறையாக அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். குக் வித் கோமாளி புகழும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.....

மீண்டும் அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை.. செம்ம டென்ஷன் ஆன தயாரிப்பாளர் | Blue Sattai Maaran 1

விளம்பரம்

படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துவிட்ட நிலையில் இரு வேறு மாதிரியான கருத்துக்கள் நிலவி வந்தன. சிலர் படம் மிக அருமையாக உள்ளது என்றும் படத்தின் இறுதியில் இளைஞர்களுக்கு தேவையான ஒரு மெசேஜ் சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு சாரார் படம் படு மொக்கையாக உள்ளது என்றும், சென்டிமென்ட் எமோஷனல் காட்சிகள் மனதை தொடவில்லை என்றும் காட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது என்றும் கருத்து கூறினர். பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு வலிமை படத்தை கழுவி ஊற்றிவிட்டார். போதா குறைக்கு அஜித்தை தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசி தல ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன கோபியை DIVORCE பண்ணிட்டு இந்த ஆட்டம் போடுறாங்க பாக்கியா

மீண்டும் அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை.. செம்ம டென்ஷன் ஆன தயாரிப்பாளர் | Blue Sattai Maaran 2

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது மற்றொரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் நாங்க வேற மாறி பாடலின் Screen Shot-ஐ போட்டு விட்டு இந்த பரோட்டாவிற்கு மாவு பிசையும் காட்சியை தியேட்டரில் பார்த்து சிரிக்காமல் இருந்தது உண்டா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதை Retweet செய்து பிரபல தயாரிப்பாளர் போஃப்டா தனஞ்செயன் இந்த பதிவை பார்த்தால் எனக்கு கோபமும் வருத்தமும் வருகிறது, தனிப்பட்ட தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று மாறன் இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Twitter Original Source From: Dr. Dhananjayan BOFTA

https://twitter.com/Dhananjayang/status/1497583783444623363

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment