The Indian Times

வசூலில் சர்க்காரை மிஞ்சிய வலிமை..எவ்வளவு கோடினு தெரியுமா?? | Valimai | Collection

இரண்டு வருட கடுமையான போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியுள்ளது வலிமை திரைப்படம். 2 வருடங்களாக அஜித்தை பார்க்காத சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் குறித்த அப்டேட்கள் கிடைத்தபோது மகிழ்ச்சி கொண்டாடத்தில் திளைத்தனர். மேலும் 24ம் தேதியை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஒரு வழியாக காலை 4 மணி ஷோ திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் கேட்ட போது படம் மிகவும் நன்றாக இருந்ததாகவே பெரும்பாலான ரசிகர்கள் கூறிவிட்டு சென்றனர். ஆனால் தற்போது இரண்டாவது மற்றும் மதிய காட்சிகள் முடிவடைந்த நிலையில் இரு வேறு மாதிரியான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

Advertisement

ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தல ரசிகர் ஒருவர், படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் மட்டுமே நன்றாக இருந்ததாகவும், மற்றபடி சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறினார். இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் ஒன்று தேவையில்லை என்பது போல் உள்ளதாக கூறினார். தல ஒருவருக்காக மட்டும் இந்த படத்தைப் பார்க்கலாம் என்றும் மற்றபடி படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் அவர் கூறினார். ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு வலிமையை கலாய்த்து தள்ளிவிட்டார். Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

தற்போது வெளியாகியுள்ள செய்தியில் வலிமை படத்தின் ஒரு நாள் வசூல் சர்க்கார் படத்தின் வசூலை மிஞ்சிவிட்டதாக கூறியுள்ளனர். ஒரே நாளில் வலிமை 34 கோடியை தாண்டிவிட்டது என்று சன் குழுமத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சென்னையில் சர்க்கார் படம் 2 கோடியை தாண்டியது அனால் வலிமை சென்னையில் மட்டும் 1 கோடியை தாண்டியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் பார்க்கும் போது சர்க்கார் 31 கோடி எனவும், வலிமை 34 கோடி எனவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

https://youtu.be/dpCAPmAVDlg?t=37

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in