வலிமை கலாய்க்க கூட லாயக்கு இல்லாத படம் – ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனம் | Valimai Review

ப்ளூ சட்டை மாறன் – இந்த பெயரை யூடியூப்பில் தேடாத ஆட்களே இருக்க முடியாது. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் சரி, எப்பேர்பட்ட இயக்குநர்களாக இருந்தாலும் சரி தனது கருத்துக்களை நேர்மையாக வைப்பவர்தான் மாறன். சும்மா ப்ளூ சட்டையை போட்டுக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் ஐந்து நிமிடம் வீடியோ வெளியிட்டால் மட்டும் போதாது, ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்று நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுத்த காரணத்தால் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கட்டாயம் படிக்கவும்  என் வாழ்க்கையில காதல்னு ஒன்னு இல்லை... பாரதி காதலை மறுத்த கண்ணம்மா... பாரதி கண்ணம்மா

வலிமை கலாய்க்க கூட லாயக்கு இல்லாத படம் - ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனம் | Valimai Review 1

விளம்பரம்

இவர் நேற்று வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமை திரைப்படம் குறித்து தற்போது விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் அவர் தல அஜீத்தை மிகவும் கலாய்த்துள்ளார். கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் உயர் அதிகாரி வேடத்தில் சென்டிமெண்டுகளை அள்ளி தெளிக்கும் வகையில் இந்த படம் உள்ளதாக கூறினார். இதே கதையோடு லட்சம் படம் வந்துவிட்டது என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும் படம் முழுவதும் பைக் மட்டும் குறுக்க மறுக்க ஓடிக் கொண்டு இருப்பதாக காட்டுகின்றனர் ஏனென்றால் படத்தில் கதை இருந்தால் தானே வேறு சீன்களை காட்ட முடியும் என்றும் அவர் கலாய்த்துள்ளார். Youtube Video Code Embed Credits: Tamil Talkies

வலிமை கலாய்க்க கூட லாயக்கு இல்லாத படம் - ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனம் | Valimai Review 2

விளம்பரம்

மேலும் அஜித்தை பார்த்தால் படத்தை தயாரிக்க வந்த பஜன்லால் சேட்டு (போனி கபூர்) போன்று உள்ளதாகவும், மீசையை வழித்துவிட்டு கொழுக்கு மொழுக்கு என்று பஜன்லால் சேட்டின் தம்பி போல் இருக்கிறார் எனவும், பழுத்த பழம் போல் உள்ள அவரது முகத்தில் தொப்பை விழுந்துவிட்டது என்றும் அஜித்தை கலாய்த்து தள்ளிவிட்டார். மேலும் நடனமே ஆட முடியமால் கையும் காலும் அஜித் ஆட்டிக் கொண்டிருக்கிறார் என்றும், வில்லன், சேசிங் சீன் எல்லாமே வேஸ்ட் என மாறன் விமர்சித்துள்ளார். மேலும் படம் காட்டு மொக்கையாக உள்ளது என்றும், கலாய்க்க கூட லாயக்கு இல்லாத படம் என்றும் இந்த படத்தை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment