The Indian Times

SALT& PEPPER LOOKல் காதில் STUD உடன் கெத்தாக சென்னை திரும்பிய அஜித் குமார் ….

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு பைக் பயணங்களை முடித்துவிட்டு அஜித் குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை திரும்பியுள்ளார்.

Advertisement

சென்னை விமான நிலையத்தில் அஜித்குமார் SALT& PEPPER LOOKல் காதில் STUD உடன் மாஸாக நடந்து சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.தல அஜித்தின் இந்த கெட்டப்பினை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அஜித் புகைப்படம் ஒன்று வெளியானாலெ போதும் அதனை பிளெக்ஸ் அடித்து பேனர் வைத்து கொண்டாடுவதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில் அவரது லேட்டஸ்ட் வீடியோ வெளியானால் சும்மா விடுவார்களா வேறெலெவெலில் கொண்டாடி வருகின்றனர்.அஜித் குமாரின் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது காரணம் அஜித் இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in