போகிற உயிர் போராடியே போகட்டும்… மகளை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் பாசமிகு அப்பாவாக யோகி பாபு.. பொம்மை நாயகி TRAILER இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

போகிற உயிர் போராடியே போகட்டும்... மகளை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் பாசமிகு அப்பாவாக யோகி பாபு.. பொம்மை நாயகி TRAILER இதோ 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.பல வெற்றி மற்றும் பல தோல்வி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.அந்தளவிற்கு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் யோகி பாபு.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

போகிற உயிர் போராடியே போகட்டும்... மகளை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் பாசமிகு அப்பாவாக யோகி பாபு.. பொம்மை நாயகி TRAILER இதோ 2

விளம்பரம்

அதன்படி இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஷான் இயக்கத்தில் நீலம் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி படம் வெளியாக உள்ளது.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலரில் ஒரு பாசமிகு அப்பாவாக நடித்து அசத்தியெடுத்துள்ளார். ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது.இப்படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment