The Indian Times

தினமும் தண்ணி போடுவேன்… என்னை திருத்தியது என் மனைவிதான்… நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

Advertisement

தற்போது சூப்பர் ஸ்டார் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் நேற்றுகலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி கூறியுள்ளார்.தான் நடத்துனராக பணியாற்றும் பொழுது தினமும் மது அருந்துவேன் ,மாமிசம் சாப்பிடுவேன் திருமணத்திற்கு பிறகு என்னை அன்பால் திருத்தியவர் என் மனைவி லதா என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மனைவி மேல் ரஜினிக்கு இருக்கும் பாசத்தினை அனைவரும் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : CHANAKYAA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in