என்னய்யா இது… தனது முகத்தை பச்சை குத்திய நபரை திட்டிய ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ்.இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2001 ஆம் ஆண்டு மின்னலே படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்து யாருப்பா அந்த இசையமைப்பாளர் என சினிமா உலகினரும் ரசிகர்களும் கேட்கும் அளவிற்கு முதல் படத்திலையே முன்னனணி இசையமைப்பாளராக உருவெடுத்தார்.அதன்பின் இவர் இசையமைத்த மஜ்னு,12பி,சாமுராய் என தொடர்ந்து ஹிட் அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

என்னய்யா இது... தனது முகத்தை பச்சை குத்திய நபரை திட்டிய ஹாரிஸ் ஜெயராஜ் 1

விளம்பரம்

காதல் என்றாலும் சரி கொண்டாட்டம் என்றாலும் சரி ஹாரிஸ் இசையை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு காப்பான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.இப்படத்திற்கு பிறகு இவர் ஏதும் இசையமைக்கவில்லை, இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.,மீண்டும் படங்களில் அவர் இசையமைப்பார்,அவரது புது பாடல்களை கேட்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் மேலும் அவர் மீண்டும் இசையமைக்க வேண்டும் என கோரிக்கையும் கொடுத்து வருகின்றனர்.

என்னய்யா இது... தனது முகத்தை பச்சை குத்திய நபரை திட்டிய ஹாரிஸ் ஜெயராஜ் 2

விளம்பரம்

தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஹாரிஸ் தீவிர ரசிகர் ஒருவர் அவரது முகத்தினை கையில் பச்சை குத்தியுள்ளார்.அதனை ஹாரிஸிடம் காண்பித்துள்ளார்.உங்கள் காதலை சொல்ல வார்த்தையே இல்லை,தயவு செய்து இது போல யாரும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சார் உங்க மனசு,தமிழ் சினிமா ஒரு சிறந்த இசையமைப்பாளரை மிஸ் செய்கிறது சீக்கிரம் வரவேண்டும் நீங்கள் என கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment