The Indian Times

குத்து DANCE-ல் இறங்கி குத்திய நடிகை பிரிகிடா…

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பிரிகிடா கதாபாத்திரத்தினையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Advertisement

இரவின் நிழல் படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை தொடர்ந்து பெறுவதால் இவரும் வித விதமாக நடனமாடி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.தற்போது இரவின் நிழலில் உள்ள குத்து பாடல் ஒன்றுக்கு தனது நண்பர் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடடே என்ன இப்படி நடனம் ஆடுறீங்க சூப்பர் என ஆச்சரியமாக பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in