The Indian Times

ரத்தத்தில் யாஷிகா ஆனந்த் படத்தினை வரைந்த தீவிர ரசிகர்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்,இருப்பினும் இவருக்கு எந்த படத்திலும் கிடைக்காத வரவேற்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு கிடைத்தது.இப்படத்தில் நடித்து இளைஞர்களிடம் பிரபலம் அடைந்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இவர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.அண்மையில் இவருக்கு கார் விபத்து நிகழ்ந்து அனைவருக்கும் தெரியும் இந்த விபத்தில் இவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

தற்போது இவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது ரத்தத்தில் யாஷிகா படத்தினையும் அவரது தோழி பவானி படத்தினையும் வரைந்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெகுவாக வைரலாகி வருகிறது.மேலும் இது யாஷிகா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த நபரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in