The Indian Times

GP முத்துவை பங்கமாக கலாய்த்த KPY பாலா

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தூத்துக்குடி,திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்போது இவர் சிவகாசிக்கு செல்லவே அங்கு விஜய் டிவியில் கலக்கி வரும் பாலா வருகை தந்துள்ளார்.இந்நிலையில் அவர்களுடன் வீடியோ போடும் பொழுது பாலா ,அண்ணன் வெடி வாங்குனாரு,அந்த அக்காகிட்ட தப்ப நடந்து அடியும் வாங்குனார் என கூறி அவரை பங்கமாக காலாய்த்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தனது பன்ச் வசனங்களால் தொடர்ந்து ஜிபி முத்துவை பங்கமாக கலாய்த்து எடுத்துள்ளார் பாலா.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in