கடலுக்குள் அஜித்துக்கு பேனர் வைத்து கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

கடலுக்குள் அஜித்துக்கு பேனர் வைத்து கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள் 1

விளம்பரம்

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு பைக் பயணங்களை முடித்துவிட்டு அஜித் குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை திரும்பியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

கடலுக்குள் அஜித்துக்கு பேனர் வைத்து கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் அதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.தற்போது புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் அஜித் 30வருடம் என்ற பேனரை கடலுக்கு அடியில் வைத்துள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்,தற்போது அஜித் ரசிகர்களின் இந்த கெத்தை காட்டும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment