The Indian Times

என் ரசிகர்கள் வந்திருக்காங்களா?… காத்திருந்த ரசிகர்களுக்காக ஓடி வந்த நயன்தாரா… காரின் மீது ஏறி ரசிகர்களுக்கு டாடா காட்டிய நயன்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. அண்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. 90 நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும் என்பதால் பல திரையரங்குகள் இடைவேளை இல்லாமல் படத்தினை ஓட்டினர்.இப்படம் நயன்தாரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவர் தற்போது புதியப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.படப்பிடிப்பின் பொழுது நயன்தாராவை காண ரசிகர்கள் கூட்டம் கூடியது.ரசிகர்கள் வருகையை அறிந்த நயன்தாரா ஓடி வந்து காரின் மீது ஏறி ரசிகர்களுக்கு கைகாட்டிய சம்பவம் ரசிகர்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in