CHESS OLYMPIAD TEASER-ஐ வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் நடைபெற உள்ளது.இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.இந்த போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடத்தப்படவில்லை.இந்நிலையில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் இந்த போட்டிகள் வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.இந்த செஸ் போட்டி ஜூலை 28 ஆம் தேதி வரை தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த போட்டிகளில் பல வீரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொள்ள உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

CHESS OLYMPIAD TEASER-ஐ வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களை செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் அழைத்து வரப்பட உள்ளதால் பல மாவட்டங்களில் போட்டிகள் தொடங்கிவிட்டன.இந்த போட்டியை நேரில் காண்பதற்கு ஒரு நாளுக்கு இந்தியர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் வெளிநாட்டினருக்கு ரூ.6000 முதல் ரூ.8000 வரையும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.இந்த போட்டியில் பங்கேற்க 197 நாடுகளில் இருந்து முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CHESS OLYMPIAD TEASER-ஐ வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

தற்போது இந்த போட்டிக்காக செஸ் ஒலிம்பியாட் டீசர் தயாரிக்கப்பட்டுள்ளது.WELCOME TO CHENNAI என்ற இந்த பாடல் டீசர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் குரலில் உருவாகியுள்ளது.இந்த டீசரை தற்போது நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இந்த போட்டியில் பங்கேற்க சுமார் 2000க்கு அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் முதல் முதலில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழக அரசு சிறப்பாக நடத்திவிட வேண்டும் என கடினமாக உழைத்து வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment