The Indian Times

செல்போனை காணவில்லை என விராட் கோலி போட்ட பதிவிற்கு பொண்டாட்டி போனில் இருந்து உணவு ஆர்டர் போடுங்கள் என கேலி செய்த தீனி நிறுவனம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தனது விளையாட்டுகளினால் மக்களை எளிதாக கவர்ந்தவர் இவர்,பல போட்டிகளில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணியாகவும் இருந்துள்ளார்.இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தொடர்ந்து இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடியும் வருகிறார்.

Advertisement

தற்போது இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது செல்போனை காணவில்லை என கூறி பதிவிட்டுள்ளார், இந்த பதிவில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமாடோ நிறுவனம் உங்க போன் இல்லையென்றால் என்ன உங்கள் மனைவி போனில் இருந்து உணவு ஆர்டர் போடுங்க என கேலியாக பதிவிட்டுள்ளது. இந்த ட்வீட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.இருப்பினும் விராட் ரசிகர்கள் பிறரின் துன்பத்தினை புரிந்துகொள்ள மாட்டிர்களா என அந்த உணவு நிறுவனத்தை வசை பாடி வருகின்றனர்

https://twitter.com/zomato/status/1622830791418867714?t=Hzp1tpm-W4qvPuxv5rpHJA&s=19

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in