The Indian Times

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் குரங்கு – வைரலாகும் வீடியோ

குரங்கு என்றாலே சேட்டை தான் என்று பலர் சொல்லி கேட்டு இருப்போம். மேலும் குழந்தை எதாவது சேட்டை செய்தாலும் குரங்கு சேட்டை என்று தான் நாம் வஞ்சிப்போம். அந்த அளவிற்கு குறும்பு தனம் கொண்டது இந்த குரங்கு. ஆனால் இங்கு ஒரு குரங்கோ குழந்தை ஒன்றுடன் பாச மழையை அள்ளி பொழிகிறது.

குழந்தை ஒன்று ஒரு சுற்றுலா மய்யத்தில் தன் பெற்றோர்களடன் சென்று இருந்தது. அங்கு ஒரு மரத்தின் கீழ் ஒரு தொட்டில் கட்டி குழந்தையை விளையாட வைத்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு குரங்கு அந்த குழந்தைக்கு அருகில் சென்று அந்த குழந்தை உடன் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Advertisement

அந்த சமயத்தில் அந்த குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக அந்த குரங்குடன் விளையாடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அன்பு பல இடங்களில் பல விலங்குகள் மத்தியிலும் உள்ளது என்பதை இந்த வீடியோவை பார்க்கும் போது தான் தெரிகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in