The Indian Times

குக் வித் கோமாளி பவித்ராவின் சர்ச்சை போட்டோஷூட் – வைரலாகும் வீடியோ

குக் வித் கோமாளி ஷோ வர வர செம்ம காமெடியா போயிட்டு இருக்கு. இதுல வர கன்டஸ்டன்ட் எல்லாரும் பண்ற காமெடி எல்லா தரப்பில் உள்ள வயதினரை சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த ஷோவில் உள்ள அனைத்து குக்குகளும் சமைக்கும் உணவில் சுவை உள்ளதோ இல்லையோ நகைச்சுவை மிகுதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக கோமாளிகளுடன் சேர்ந்து குக் படும் அவதி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். Watch the video below.

Advertisement

இது போன்று பல நகைச்சுவை தருணங்கள் கொண்ட இந்த ஷோ ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து விட்டது. இந்த நிகழ்ச்சிக்காக பல ரசிகர்கள் உள்ளனர். இந்த ஷோ மூலம் பெரிதும்பிரபலமானவர் பவித்ரா லக்ஷ்மி. இவர் மானாட மயிலாட நிகழ்ச்சி மற்றும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்சியில் நடனம் ஆடி இருந்தார். இப்போது குக் வித் கோமாளி ஷோவில் குக் ஆக உள்ளார். மேலும் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement


இவர் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த புகைப்படம் பவித்ரா கடந்த வருடம் போட்டோ ஷூட் செய்து வெளியிட்ட புகைப்படம் என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பவித்ரா லக்ஷ்மி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் டிவிட்டர் அதிகமாக பயன்படுத்துவது இல்லை. இன்ஸ்டாகிராமில் இருந்தே பழகிவிட்டேன். என்னுடைய பெயரை வைத்து சில தவரான முறையில் புகைப்படம் வெளிவருகிறது என்று வருத்தம் தெரிவித்தார். இது எந்த அளவிற்கு சரி என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். எனக்கு சப்போர்ட் செய்து வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறினார். உங்களது சப்போர்ட் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Video Credits: Cineulagam

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in