The Indian Times

PARTY-ல் DANCE ஆடிய நயன்தாரா….

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

Advertisement

ஸ்பெயின் நாட்டில் தங்களது இரண்டாவது ஹனிமூனுக்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்றுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது.அங்கு பார்ட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர்.நடிகை நயன்தாரா பார்ட்டியை அனுபவித்து நடனமாடியுள்ளதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=SVBXDyL1FiU&feature=youtu.be&ab_channel=BehindwoodsTV

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in