யாருங்க இவரு குடத்துலயே ஆழ்வார் பேட்டை ஆண்டவா பாடலை பாடி அசத்துறாரு

சில வருடங்களுக்கு முன்னர் கண் பார்வை இல்லாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் விடுமுறையை கொண்டாடும் சுந்தரி சீரியல் கேபிரியல்

யாருங்க இவரு குடத்துலயே ஆழ்வார் பேட்டை ஆண்டவா பாடலை பாடி அசத்துறாரு 1

விளம்பரம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளை செய்துள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி பல மக்களிடமும் சென்றடைந்தார் திருமூர்த்தி.நிச்சயம் இவருக்கு இதற்கு பின்னர் நிறைய சினிமா பாடல் பாட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

யாருங்க இவரு குடத்துலயே ஆழ்வார் பேட்டை ஆண்டவா பாடலை பாடி அசத்துறாரு 2

விளம்பரம்

இவர் தனது யூடியூப் சேனலில் பல பெரிய பாடல்களை குடத்திலேயே இசையமைத்து பாடி பதிவிட்டு வருகிறார்.இதனை கேட்க பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பாடும் பாடல்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது இவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்,மேலும் அதற்கு தண்ணீர் கேனை  வைத்து தாளமும் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது,திருமூர்த்தியின் திறமையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : singer thirumoorthy

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment