தசாவதாரம் கமலை போல பல GETUP போட்டு திருடும் விக்ரம்…கோப்ரா TRAILER

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

தசாவதாரம் கமலை போல பல GETUP போட்டு திருடும் விக்ரம்...கோப்ரா TRAILER 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் உருவாகி உள்ளது.கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.செவென் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

தசாவதாரம் கமலை போல பல GETUP போட்டு திருடும் விக்ரம்...கோப்ரா TRAILER 2

விளம்பரம்

படப்பிடிப்பு மும்முரமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா பரவலால் படப்பிடிப்பு தடைபட்டது.பின்னர் பழைய நிலைக்கு எல்லாம் திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு படம் எடுத்து முடிக்கப்பட்டது.தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ட்ரைலரில் பல கெட்டப்புகளில் வந்து அசத்தியுள்ளார் விக்ரம்.ட்ரைலருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment